13 வருடத்தில் இதுவே முதல் முறை. மோசமான சாதனையை பதிவு செய்த சி.எஸ்.கே – வெளியான புள்ளி விவரம்

CSK-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் குவித்தது.

cskvsmi

- Advertisement -

சென்னை அணியின் முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் சாம் கரன் மட்டும் இறுதி வரை சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு நகர்ந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் 37 பந்துகளில் 46 ரன்களும், இஷான் கிஷன் 37 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது ஆட்டநாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

ishan kishan

இந்நிலையில் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி பெற்ற தோல்வியில் 13 வருட ஐபிஎல் வரலாற்றிலேயே மோசமான சாதனை ஒன்றை சிஎஸ்கே அணி நிகழ்த்தியுள்ளது. அதாவது இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணி பவர்ப்ளே ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது இல்லை. நேற்று முதல் முறையாக 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 24 ரன்களை மட்டுமே அடித்திருந்தது.

Dhoni-1

இதன் மூலம் இந்த மோசமான சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை அடிக்க தகுதியாக இருக்கும் சிஎஸ்கே அணி இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே படுமோசமாக விளையாடி வருவது ரசிகர்களுக்கு கவலையை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement