சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக யாரையும் வாங்கல. அது எங்களால் முடியாது – சி.எஸ்.கே கொடுத்த விளக்கம்

Kasi
- Advertisement -

இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில் இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து திடீரென விலகிய சுரேஷ் ரெய்னாவிற்கு மாற்று வீரர் யார் என்ற ஒரு விடயம் தான் தற்போதைய சிஎஸ்கே அணியில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. ரெய்னாவிற்கு பதிலாக யார் விளையாடுவார்கள் என்பது குறித்து பல வீரர்களும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Raina

- Advertisement -

அந்த வகையில் ரெய்னாவின் இடத்தில் தோனி விளையாடுவார், முரளிவிஜய் விளையாடுவார், டூபிளெஸ்ஸிஸ் விளையாடுவார் என ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரெய்னாவின் இடத்தில் யார் விளையாடுவார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் இந்தியா திரும்பிய ரெய்னா தற்போது மீண்டும் அணியில் விளையாட விருப்பம் தெரிவித்தும் அவரை அணி நிர்வாகம் துபாய்க்கு அழைக்கவில்லை.

இதன் காரணமாக ரெய்னா இத்தொடரில் விளையாட மாட்டார் என்றே தோன்றுகிறது. ஆனால் ரெய்னாவிற்க்கு பதிலாக யார் விளையாடுவார்கள் என்பது தொடரின் ஆரம்பத்தில் தான் தெரியும் என உரிமையாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் ஹர்பஜன் சிங்கிற்கும் மாற்று வீரர் யார் என்ற உறுதியான தகவல்களை சிஎஸ்கே நிர்வாகம் அளிக்கவில்லை. இந்நிலையில் தற்போது அவருக்கு பதிலாக மூன்றாம் வரிசையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த இடத்திலேயே அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மலனை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

Raina-1

ஆனால் இதனை தற்போது சிஎஸ்கே அணியின் முக்கிய நிர்வாகியான காசிவிசுவநாதன் மறுத்துள்ளார். இதற்கு தெளிவான விளக்கத்தையும் கொடுத்துள்ள அவர் கூறுகையில் : சென்னை அணியில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவில் வெளிநாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டு முழுமை அடைந்து விட்டனர். ஓரணியில் 8 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.

Raina-1

அந்த வகையில் ஏற்கனவே சென்னை அணியில் 8 வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதனால் புதிய வீரராக நாங்கள் யாரையும் ஒப்பந்தம் செய்யவும் மாட்டோம் அதை செய்ய எங்களுக்கு உரிமையும் கிடையாது. எனவே ரெய்னாவுக்கு பதிலாக நாங்கள் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

Advertisement