11 நாடுகள் 11 வீரர்கள் ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் லெவன் அணி – சூப்பர் மிக்சிங் டீம் இதோ

World-team
- Advertisement -

கிரிக்கெட் வரலாற்றில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடியுள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு திறமை வாய்ந்த வீரர்கள் இருப்பார்கள். இப்படி கிரிக்கெட் வரலாற்றில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தனித்தன்மை வாய்ந்த வீரர்களை எடுத்து ஒரு டெஸ்ட் அணியை கட்டமைத்தால் எப்படி .அப்படிப்பட்ட அணி தான் தற்போது பார்க்கிறோம்.

cook

இந்த அணியை எடுத்துக் கொண்டால் இந்த அணிக்கு அலிஸ்டர் குக் துவக்க வீரராக இருப்பார். இவர் இடதுகை ஆட்டக்காரர் சர்வதேச அளவில் 161 டெஸ்ட் போட்டிகளில் ஆடி பத்தாயிரம் ரன்கள் குவித்துள்ளார். இவர் கேப்டனாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. மற்றொரு துவக்க வீரர் குமார் சங்ககாரா இருக்கிறார் இவரும் பட்டையைக்கிளப்பும் கூடியவர்.

மூன்றாவது இடத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரையன் லாரா இடம் பிடிக்கலாம். இந்த அணியில் இடம்பிடிக்க மிகச்சிறந்த தகுதியான வீரர் இவர்தான். நான்காவது இடத்திற்கு இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யலாம். ஏனெனில் இவர் இல்லாத எந்த அணியும் சரியாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்-ரவுண்டராக தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் விக்கெட் கீப்பராக ஜிம்பாப்வே அணியின் ஆன்டி பிளவர், சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன். மேலும் சுழற்பந்துவீச்சாளராக ஷேன் வார்னே. இடது கை வேகப்பந்து வீச்சாளராக வாசிம் அக்ரம். மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளராக ரசித் கான் ஆகியோரை தேர்வு செய்யலாம்.

rashidfirst

மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லி ஆகியோர் இடம் பிடிக்கலாம். இதோ நாம் கனித்துள்ள : அலிஸ்டர் குக், குமார் சங்ககாரா, பிரையன் லாரா, சச்சின், ஜாக் காலிஸ், அண்டி பிளவர், ஷகிப் அல் ஹசன், ஷேன் வார்னே, ரஷித் கான், வாசிம் அக்ரம், ஹாட்லி

Advertisement