ஐ.பி.எல் தொடர் நடைபெறுவது குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ – விவரம் இதோ

IPL-1
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் தற்போது வரை நடக்குமா ? இல்லையா ? என்று எந்த முடிவும் தெரியவில்லை. கொரோனா வைரஸ் ஒரு பக்கம் ருத்ர தாண்டவமாட மார்ச் 29ஆம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் கொரோனா வைரஸ் உடன் வாழ அனைவரும் கற்றுக் கொண்டு விட்டோம்.

Ipl cup

தற்போது அடுத்ததாக கிரிக்கெட் போட்டிகளும் ரசிகர்கள் இல்லாமல் துவங்கி விட்டது. இனி ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்திவிடலாம் என்று பிசிசிஐ திட்டம் தீட்டி வருகிறது. இதற்கு டி20 உலக கோப்பை தொடர் மட்டும்தான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. டி20 உலக கோப்பை தொடர் நடக்க இருக்கும் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்திவிடலாம் என்று பிசிசிஐ சிந்தித்து வருகிறது.

ஆனால் இதுவரை உலக கோப்பை தொடரை தள்ளி வைப்பது குறித்து எந்த ஒரு முடிவையும் ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஐசிசி தன் முடிவை அறிவித்தால் தான் பிசிசிஐ ஐபிஎல் தொடருக்கு தயாராகும். இதன் காரணமாக ஐசிசியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறது பிசிசிஐ. இந்நிலையில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

Ganguly

ஐபிஎல் இல்லாவிட்டாலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை அதற்கான ஏற்பாடுகளை நாம் துரிதப்படுத்த வேண்டும் என்று மாநில கிரிக்கெட் நிர்வாகிகள் எங்களை கேட்டுக்கொண்டுள்ளனர். பல நாடுகளில் உள்ளூர் போட்டிகள் தொடங்கப்பட்டு விட்டன. அமெரிக்காவின் கூடைப்பந்து விளையாடும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடைபெற்றுவருகிறது. கால்பந்து போட்டிகளும் துவங்கி விடப்பட்டது. ஆஸ்திரேலியாவிலும் உள்ளூர் ரக்பி லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

இதனால் ஐபிஎல் தொகையும் துவங்க வெகு சீக்கிரத்தில் கூட்டத்தை நடத்துவோம் ஐபிஎல் தொடர் நடைபெறுமா இல்லையா என்பது குறித்து தற்போது உறுதியாக கூறமுடியாது. ஆனால் டி20 உலகக் கோப்பை தொடர் தொடர்பாக ஐசிசி முடிவெடுத்த பின்னர் இதற்கான உறுதியான முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் பிசிசிஐயின் பொருளாளர்.

Advertisement