ஆஸ்திரேலியா அணிக்கு கிட்டத்தட்ட மூன்று உலகக் கோப்பை தொடர்களை வெற்றி பெற்று கொடுத்தவர் ரிக்கி பாண்டிங். தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். இந்நிலையில் 1999-ஆம் ஆண்டு இவர் கலந்து கொண்டு விளையாடிய உலக கோப்பை தொடரின் நினைவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் வாக் கேப்டனாக இருந்தார். இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய ஆஸ்திரேலிய அணி வெறும் 133 ரன்கள் மட்டுமே சேஸ் செய்து எளிதில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரின் மிக முக்கிய வீரராக இருந்தார் ரிக்கி பாண்டிங். இளம் வீரராக இருந்ததால் அதற்கு அடுத்து 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் கேப்டனாக மாறி 2 கோப்பைகளையும் வென்று கொடுத்தார். இந்நிலையில் 21 வருடங்கள் கழித்து 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் தான் அணிந்து இருந்த ஜெர்சியை பதிவு செய்து தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார் ரிக்கி பாண்டிங்.
Can’t believe it’s been 21 years since the 99 World Cup final, the highlight of my career to that point.
It finished with me on @TomMoodyCricket‘s shoulders in the middle of Lord’s singing the team song, an amazing experience. pic.twitter.com/OO5QklK0Ei
— Ricky Ponting AO (@RickyPonting) June 20, 2020
இது நடந்து தற்போது 21 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று என்னால் நம்ப முடியவில்லை, இது என்னுடைய கிரிக்கெட் வாழ்வின் உச்சம். போட்டி முடிந்த பின் டாம் மூடி எனது ஜெர்சியில் ஆட்டோகிராப் செய்துள்ளார். அப்போது லார்ட்ஸ் மைதானத்தில் நாங்கள் பாடிய பாட்டை என்னால் தற்போது வரை மறக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார் ரிக்கி பாண்டிங்.
ரிக்கி பாண்டிங்கின் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த கொரோனா ஓய்வு நேரத்தில் முன்னணி வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.