டுமினி தேர்வு செய்த பெஸ்ட் லெவன் ஐ.பி.எல் லெவன் அணி. கேப்டன் யார் தெரியுமா ? – விவரம் இதோ

- Advertisement -

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஆல்-ரவுண்டராக இருந்தவர் ஜேபி டுமினி. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இவர் இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் வலதுகை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இந்நிலையில் தனது மிகச்சிறந்த ஐபிஎல் அணியை வெளியிட்டுள்ளார் அவர்.

இந்த அணியில் துவக்க வீரர்களாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் இருக்கின்றனர். மூன்றாவது இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார் ஜேபி டுமினி. நான்காவது இடத்திற்கு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி வருகிறார்.

அதனை அடுத்து பெங்களூரு அணியின் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் இடம் பிடிக்கிறார். ஆல்-ரவுண்டராக மும்பை இந்தியன்ஸ் அணியின் கெரோன் பொல்லார்ட் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆன்ட்ரே ரசல் ஆகியோர் இடம் பிடிக்கின்றனர். மேலும் ,வேகப்பந்து வீச்சாளராக பிரட் லீ இடம்பிடித்துள்ளார்.

Gayle

சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மற்றும் இம்ரான் தாகிர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக லசித் மலிங்கா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஆச்சரியமாக இந்த அணியில் தோனி இல்லாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதுவும் இரட்டை ஆச்சரியமாக இந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலியை நியமித்துள்ளார் அவர்.

Kohli

ஏனெனில் விராட் கோலி ஐபிஎல் தொடரில் அவர் ஒரு கோப்பையை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ் கெய்ல், ஆடம் கில்கிறிஸ்ட், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி (கே), ஏபி டி வில்லியர்ஸ் (கீ), பொல்லார்டு, ஆண்ட்ரே ரஸ்ஸல், பிரட் லீ, முத்தையா முரளிதரன், லசித் மலிங்கா, இம்ரான் தாஹிர்

Advertisement