ஐ.பி.எல் நடக்க இந்த ஒரு வழிதான் இருக்கு. அதையும் ரசிகர்கள் ரசிப்பாங்க – ரஹானே வெளிப்படை

Rahane
- Advertisement -

கொரோனா வைரஸ் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆன பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் கிரிக்கெட் போட்டிகள் அடுத்து எப்போது துவங்கும் என்ற நிலையும் இப்போது தெரியாமலேயே சிக்கலில் உள்ளது.

Ipl cup

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓய்வினை கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீட்டிலிருந்து நேரத்தை கழித்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வருவது மட்டுமின்றி தங்களது கிரிக்கெட் குறித்து அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரகானே இந்த ஐபிஎல் தொடர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்டகாலமாக விளையாடி வந்த ரஹானே இந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு சீசனுக்கு டெல்லி அணிக்கு மாறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் இந்த தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்று தகவல்கள் வந்து கொண்டிருந்தாலும் போட்டி நடைபெற வேண்டும் என்று கிரிக்கெட் வீரர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

Rahane

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டால் ஐபிஎல் கிரிக்கெட் நடக்க வாய்ப்பு உள்ளது. வெறிச்சோடிய மைதானத்தில் போட்டியை நடத்தலாம் என்று கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அதாவது ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த அனைவரும் கேட்டுக் கொண்டுள்ளனர் .இதற்கு சில எதிர்ப்புகள் வந்தாலும் தற்போது இதற்கான ஆதரவுகளும் தற்போது குவிந்து வருகின்றன.

- Advertisement -

மேலும் தற்போது ரஹானேவும் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் தொடரை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது : நம்முடைய வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் ஏறக்குறைய ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் விளையாடிக் பழக்கப்பட்டவர்கள் இதனால் அவர்களுக்கு அப்படி விளையாடிய அனுபவம் உள்ளது.

Rahane

எனவே ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதால் எங்களுக்கு ஒன்றும் இல்லை. அவர்களின் பாதுகாப்புதான் தற்போது முக்கியம். அவர்கள் வீட்டில் இருந்தே கூட லைவ்வாக போட்டியை காண முடியும் இந்த மாறுபட்ட அனுபவத்தை மகிழ்ச்சியாக அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்றும் ரகனே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement