என்னது வயசாயிடுச்சா ? எனக்கு அப்படி தெரியல அவரிடம் இருக்கும் திறமை பத்தி உங்களுக்கு தெரியுமா ? – பொங்கி எழுந்த ரெய்னா

Raina
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தோனிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. மேலும் சிறிது மாதங்கள் ஓய்வு எடுத்த தோனி மீண்டும் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதால் அவரது இடம் தற்போது இந்திய அணியில் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் 6 மாதங்களுக்கு மேலாக அவர் கிரிக்கெட் விளையாடுவதால் பிசிசிஐயின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது முற்றுப்புள்ளி அடைந்துவிட்டதாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Dhoni 1

- Advertisement -

இந்நிலையில் தோனி தனது ஓய்வு குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் அவர் விரைவில் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் தோனியோ ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் தனது நிரூபித்து அணியில் இடம் பெறலாம் என்றும் பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் அணிக்கு மீண்டும் திரும்புவது மிகவும் சிக்கலாகி உள்ளது. இது குறித்து பல முன்னாள் வீரர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் அதிரடி வீரரும், சி.எஸ்.கே அணியின் துணைக்கேப்டனான ரெய்னா கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

Raina

இந்நிலையில் தோனி குறித்து ரெய்னா கூறுகையில் : தோனியால் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிகிறது. இன்னும் அவருக்குள் சில ஆண்டுகள் கிரிக்கெட் மீதமுள்ளது. புது விதமான முயற்சிகளை தோனி தற்போதும் செய்து வருகிறார். பயிற்சி ஆட்டத்தில் சென்னையில் சில நாட்கள் விளையாடினோம்.

- Advertisement -

அப்போது தோனியின் சிக்ஸர்கள் வழக்கம்போல இமாலய சிக்சர்களாக இருந்தது. ஒவ்வொரு நாளும் மாலையில் 3 மணி நேரம் பயிற்சி செய்தோம். என்னைக் கேட்டால் தோனி இப்போதும் சிறப்பாக விளையாடுவார். வயதாகும் எந்த ஒரு அறிகுறியும் அவர் உடலில் காட்டவில்லை. அவர் முழுவதுமாக வேறுவிதமாக தெரிகிறார். அவரின் புது புது முயற்சி அவரை புதுவிதமாக காட்சி அளிக்கிறது.

Dhoni

அதனால் அவரை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். கங்குலி மற்றும் தோனி தலைமையில் நான் சுமார் பதினான்கு பதினைந்து ஆண்டுகள் விளையாடி உள்ளேன். அவர்கள் தவறு ஏதாவது இருந்தால் குறிப்பிட்டுச் சொல்வார்கள் என்று தோனி குறித்து ரெய்னா பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement