13 சீசனாக ஐபிஎல் விளையாடியும் நான் கற்றுக் கொண்டது இந்த மூன்று தமிழ் வார்த்தைகள் தான் – சிஎஸ்கே வீரர்

- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது சீசன் வரும் 29ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்து ரசிகர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் முதல் போட்டியில் மோத உள்ளன. கடந்த முறை கோப்பையை அருகில் வந்து இறுதிப்போட்டியில் நழுவவிட்ட சென்னை அணி இந்த முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த தொடருக்கான பயிற்சியில் சென்னை அணி வீரர்கள் ஏற்கனவே துவங்கியுள்ளனர். இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் சீனியர் வீரரான பியூஷ் சாவ்லா தான் கற்றுக்கொண்ட 3 தமிழ் வார்த்தைகள் குறித்து வீடியோ ஒன்றினை பேசியுள்ளார்.

அதனை சிஎஸ்கே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பிட்டவை : எப்படி இருக்க, சுடுதண்ணீர், சாப்டாச்சா இந்த மூன்று வார்த்தைகள் தான். நான் இதுவரை தமிழில் கற்றுக்கொண்டது என்று சென்னை அணியின் சூப்பர் கிங்ஸ் ஸ்டோர் பார்வையின் போது கூறியுள்ளார்.

- Advertisement -

அதனை வீடியோவாக பதிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்து உள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை அணி வீரர்கள் குறித்தும், சென்னை அணி குறித்தும் சிஎஸ்கே நிர்வாகம் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் ஹிட் அடிக்க தவறியதில்லை. அந்தவகையில் பியூஷ் சாவ்லாவின் இந்த வீடியோவும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement