இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி இதுவரை விளையாடவில்லை. கிட்டத்தட்ட அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஏழு மாதங்கள் ஆகிவிட்டன.
இதனால் தோனியை இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. இதனால் தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கஷ்டம் என்று கூறப்பட்டாலும் தோனியின் ரசிகர்கள் அவரை கொண்டாடுவதை நிறுத்தவில்லை.
மேலும் தற்போது 29 ஆம் தேதிக்கு தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் 13 வது சீசனில் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்களும் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் தற்போது தோனி சென்னை வந்து கடந்த சில நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் சென்னை வந்ததிலிருந்து அவர் குறித்து செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி 19ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதற்காக வலைப்பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தோனி வலைப்பயிற்சியில் தொடர்ந்து 5 பந்துகளில் 5 சிக்சர்களை பறக்கவிட்டு தனது அதிரடியை காண்பித்துள்ளார். மேலும் இந்த வருட ஐபிஎல் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார் என்றும் டி20 உலக கோப்பை தொடரில் அவர் கட்டாயம் விளையாடுவார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
BALL 1⃣ – SIX
BALL 2⃣ – SIX
BALL 3⃣ – SIX
BALL 4⃣ – SIX
BALL 5⃣ – SIXஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்ட தல தோனி!
முழு காணொளி காணுங்கள் 📹👇
#⃣ “The Super Kings Show”
⏲️ 6 PM
📺 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ்
📅 மார்ச் 8
➡️ @ChennaiIPL pic.twitter.com/rIcyoGBfhE— Star Sports Tamil (@StarSportsTamil) March 6, 2020
தோனி அடித்த சிக்ஸர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவினை ரசிகர்களும் அதிக அளவில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.