ஐ.பி.எல் தொடருக்கு முன் ஒரு பிரமாண்ட போட்டி கங்குலி திட்டம் – அசரவைக்கும் தகவல் இதோ

Ganguly
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இம்முறை 2020 ஆம் ஆண்டு 13 ஆவது சீசனாக ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தொடர் மார்ச் இறுதியில் இருந்து துவங்க உள்ளது.

Ipl cup

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கான பிசிசிஐ கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த கூட்டத்தில் வழக்கம் போல இரவு 8 மணிக்கும் மாலை 4 மணிக்கும் போட்டிகள் தொடங்கும் என்றும் மேலும் இந்த தொடரில் முக்கியமாக விதிமுறையாக நோபால் அம்பயரும் மற்றும் காயமடைந்த வீரருக்கு பதிலாக மாற்று வீரர் என சில விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.

மேலும் இந்த தொடர் குறித்து பேசிய இந்திய அணியின் பிசிசிஐ யின் தலைவரான கங்குலி கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மூன்று நாட்களுக்கு முன்னதாக அதாவது மார்ச் 26 ஆம் தேதி தெற்கு மற்றும் மேற்கு அணிகள் இரு அணிகளுக்கு இடையேயான ஆல் ஸ்டார்ஸ் போட்டி ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் மும்பை ஒரு அணியாகவும், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் ஓரணியாகவும் இணைந்து ஆல் ஸ்டார்ஸ் போட்டி நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்த போட்டி ஐபிஎல் போட்டிக்கு முன்னர் நடைபெறும் என்றும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement