நாட்டை சூதாட்டத்திற்கு விற்றவர்களை பாகிஸ்தான் வரவேற்றது. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய – டேனிஷ் கனேரியா

Kaneria
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா தான் ஹிந்து என்பதால் அணியில் பாகுபடுத்தப்பட்டதாகவும் மேலும் சக வீரர்கள் என்னுடன் அமர்ந்து உணவு சாப்பிட கூட யோசிப்பார்கள் என்ற ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார். அந்த விவகாரம் சர்ச்சையாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

Kaneria 2

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் சிலரும் கனேரியாவின் இந்த கருத்துக்கு பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பரபரப்பான விடயத்தை டேனிஸ் கனேரியா வெளியிட்டுள்ளார். அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அதன் வீரர்களும் சூதாட்ட தரகர்கள் பற்றி அறிந்திருந்ததாக தற்போது இவர் கூறியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து உள்ளூர் போட்டி ஒன்றில் நடைபெற்ற சூதாட்டத்தில் தொடர்புடைய இடைத்தரகர் பலமுறை பாகிஸ்தானுக்கு சென்றிருந்ததாகவும் அப்போது அவரை பாகிஸ்தான் வீரர்களுக்கு நன்கு தெரிந்து இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டை சூதாட்டத்துக்காக விற்று சிறைக்கு சென்றவர்களை கிரிக்கெட் வாரியம் வரவேற்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Pakistan 1

மேலும் பாகிஸ்தான் அணிக்கும் நிர்வாகத்திற்கும் சூதாட்ட தரகர்கள் குறித்த அனைத்து விவரங்களும் தெரிந்தேதான் செயல்படுகிறார்கள் என்பது என்றும் கனேரியா கூறினார். இங்கிலாந்து கிரிக்கெட் கவுன்டி போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகாரில் சிக்கி கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை பெற்றவர் டேனிஷ் கனேரியா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement