இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார். அதற்கடுத்து 2026 ஐ.பி.எல் தொடரிலும் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது அடுத்தடுத்து இரண்டு மோசமான இன்னிங்ஸ்களை விளையாடியிருந்தார்.
விராட் கோலியை ரோல் மாடலாக சஞ்சு சாம்சன் எடுத்துக்கொள்ள வேண்டும் : சஞ்சய் மஞ்சரேக்கர்
அதன்பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியிலும் அவர் 1 ரன் மட்டுமே குவித்ததால் இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது இடத்தில் தற்போது வைபவ் சூர்யவன்ஷி கடந்த இரண்டு ஆட்டங்களாக விளையாடி வருகிறார். அதோடு எதிர்வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அறிவிக்கப்பட்ட போது அந்த அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டார்.
இப்படி சஞ்சு சாம்சனை ஒரு சில ஆட்டங்களை வைத்து முடிவு செய்து அணியிலிருந்து நீக்கியது தவறு என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சஞ்சு சாம்சனின் நீக்கம் குறித்தும் அவர் விராட் கோலியை பின்தொடர வேண்டும் என்பது குறித்தும் சில கருத்துக்களை இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
என்னை பொறுத்தவரை இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சனை நீக்கியுள்ளார்கள் என்றால் அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை என்பதுதான் உண்மையான காரணமாக நினைக்கிறேன். ஏனெனில் எப்போதுமே சஞ்சு சாம்சன் நல்ல பிட்னஸ்சுடன் இருந்தது கிடையாது. எனவே இனி சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு மீண்டுவர வேண்டுமெனில் இப்போதிலிருந்து விராட் கோலி போன்று உடற்தகுதியில் கவனத்தை செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க : இதெல்லாம் என்ன முடிவு.. கம்பீரின் முடிவை விமர்சித்த தினேஷ் கார்த்திக் – என்ன நடந்தது?
இந்த விடயத்தில் விராட் கோலியை அவர் முன்மாதிரியாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். பிட்னஸை சரியாக மெயிண்டன் செய்து ரன் குவித்தால் மீண்டும் அவருக்கு இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு இருக்கும். எனவே என்னுடைய தரப்பில் இருந்து நான் அவருக்கு கூறும் அறிவுரை ஒன்று அவரது பிட்னஸ்ஸை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



