இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் போது 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணி துவக்கத்திலிருந்து அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
கவுதம் கம்பீரின் முடிவை விமர்சித்த தினேஷ் கார்த்திக் :
குறிப்பாக பவர்பிளே ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி முழுவதுமாக 20 ஓவர்களை கூட பூர்த்தி செய்ய முடியாமல் 11.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணி படுமோசமான சாதனைகளையும் நிகழ்த்தியிருந்தது. அதோடு இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றும் வாய்ப்பையும் இருந்தது.
இந்த போட்டியின் போது துவக்கத்திலேயே 5 விக்கெட் விழுந்த வேளையில் ஷிவம் துபேவுக்கு முன்னதாக ஹர்ஷித் ராணாவை களம் இறக்கியது தவறான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் போட்டியின் நேரலையில் வர்ணனையாளராக கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
ஹர்ஷித் ராணாவை ஷிவம் துபேவுக்கு முன்னதாக ஏன் களம் இருக்கிறீர்கள்? என்ன விளையாடுகிறீர்களா? உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட அவர் பவர்பிளேவில் பேட்டிங் செய்திருப்பாரா? என்று எனக்கு தெரியவில்லை. டி20 போட்டியில் வலது கை இடது கை கூட்டணியை பயன்படுத்துவதற்கு ஒரு எல்லை இருக்கிறது. இப்படி ஒரு போட்டியில் ஷிவம் துபே போன்ற ஒரு நல்ல பேட்ஸ்மேனை வைத்துக்கொண்டு அவருக்கு முன்னதாக ஹர்ஷித் ராணாவை களமிறக்குவது மிகப்பெரிய தவறு.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனை ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் தேர்வு செய்யாதது ஏன்? – கம்பீர் விளக்கம்
இந்த முடிவை யார் எடுத்திருந்தாலும் அது தவறுதான் என காட்டமாக பேசியிருந்தார். வழக்கமாகவே ஹர்ஷித் ராணாவை பந்துவீச்சு ஆல்ரவுண்டராக வளர்க்கும் முயற்சியில் இருக்கும் கம்பீர்தான் இந்த முடிவை எடுத்திருப்பார் என்பதனால் அவரை தினேஷ் கார்த்திக் விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



