இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் பும்ரா எடுக்கும் – ஸ்பெஷல் பயிற்சி

Jasprit Bumrah
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு இந்த தொடரில் அவரது செயல்பாடு சிறப்பாக அமையவில்லை. இந்த 2026 ஐ.பி.எல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். அதுமட்டும் இன்றி ஓவருக்கு 8.36 என்கிற வகையில் அதிக ரன்களையும் விட்டுக் கொடுத்திருந்தார்.

இலங்கை தொடருக்காக தயாராகும் ஜஸ்ப்ரீத் பும்ரா :

எப்போதுமே இல்லாத அளவிற்கு இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு மோசமாக அமைந்த நிலையில் அடுத்ததாக அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறார். இந்திய அணிக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாடியிருந்த அவர் அதன்பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பணிச்சுமை காரணமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்த தொடரில் இருந்தே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து சென்றடைந்துள்ள பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்காக பயிற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதைத்தாண்டி அவர் அடுத்த இலங்கை தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதாவது ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துட்டார்.. அப்படி பண்ணியிருக்க கூடாது – கபில் தேவ் கருத்து

அந்த தொடருக்கு தயாராகும் முறையில் சிகப்பு பந்துகளை வைத்து டெஸ்ட் மேட்ச்க்கு ஏற்றவாறு பந்துவீச்சு பயிற்சிகளை அவர் எடுத்துக்கொண்டு வருகிறார். அதேவேளையில் இங்கிலாந்து ஒருநாள் தொடர் நடைபெறுவதற்கு இன்னும் பல நாட்கள் இருப்பதினால் சரியான நேரத்தில் அவர் வெள்ளை பந்து பயிற்சிகளிலும் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

Advertisement