விராட் கோலி அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துட்டார்.. அப்படி பண்ணியிருக்க கூடாது – கபில் தேவ் கருத்து

Kapil Dev and Virat Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2027 உலக கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ள விராட் கோலி நிச்சயம் அந்த தொடரில் விளையாடி முடித்துவிட்டு ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வெளியேறுவார் என்று தெரிகிறது.

விராட் கோலி டெஸ்ட் ஓய்வு குறித்து : கபில் தேவ் பேச்சு

தற்போது 37 வயதாகும் விராட் கோலி இன்றளவும் மிகச் சிறப்பான பிட்னஸ்சுடன் இருந்து வருகிறார். அதன் காரணமாக அவர் குறைந்தது 40 வயதாக விளையாடியிருக்க வேண்டும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். ஆனால் விராட் கோலி இரண்டு வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டு தற்போது ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி டெஸ்ட் போட்டியிலிருந்து கோபத்தில் ஓய்வை அறிவித்துவிட்டார் என்றும் அவர் அப்படி செய்திருக்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை அடிக்க வேண்டும் என்பது குறித்து பேசவில்லை.

ஆறு மாதங்கள் அவர் தனது கோபத்தை கட்டுக்குள் வைத்து உள்ளூர் போட்டிகளுக்கு சென்று விளையாடியிருந்தால் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடியிருக்க முடியும். ஒருமுறை இந்திய அணிக்காக விளையாடுவதை நிறுத்திவிட்டால் அந்த வாய்ப்பு மீண்டும் கிடைப்பது கடினம். என்னை பொருத்தவரை விராட் கோலிக்கு இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் முழு தகுதியுள்ளது. அவரால் இன்னும் சில காலம் நிச்சயம் விளையாட முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த 20 வருஷத்துக்கான அற்புதம் இவர்.. 1 வருஷம் ரெஸ்ட் இல்லாம ஆட வைங்க – சிவராமகிருஷ்ணன் பேட்டி

அவர் ஏதோ ஒரு கோபத்தில் ஓய்வு முடிவை எடுத்துவிட்டார் அதை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று கபில் தேவ் கூறியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஃடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி 2025 ஆம் ஆண்டு வரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதம் மற்றும் 31 அரைசதம் என 9230 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement