கம்பீர் இந்த விடயத்தை தெளிவா சூர்யவன்ஷியிடம் சொல்லனும்.. அதுதான் கரெக்ட் – பார்த்திவ் படேல் கருத்து

Gambhir and Vaibhav Sooryavanshi
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியும் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடரிலேயே இந்திய அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாவார் என்று பேசப்பட்ட நிலையில் அந்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் இடம் பிடித்திருந்த அவருக்கு முதலாவது போட்டியின் போது வாய்ப்பு கிடைக்கவில்லை.

கம்பீர் தெளிவாக வைபவ் சூர்யவன்ஷியிடம் பேசனும் : பார்த்திவ் படேல்

இவ்வேளையில் கடந்த சில போட்டிகளாக சஞ்சு சாம்சன் தொடர்ந்து தடுமாறி வருவதால் அவருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய வரும் வீரர்களை அவ்வளவு எளிதாக மாற்றக்கூடாது என்பதற்காக தொடர்ச்சியாக சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் வைபவ் சூர்யவன்ஷியிடம் அவரது அறிமுக வாய்ப்பு குறித்து தெளிவாக பேசிவிட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

இந்த இங்கிலாந்து தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் நிச்சயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேவேளையில் அவரிடம் அவருடைய வாய்ப்பு குறித்து தெளிவான தகவலை நிர்வாகக்குழு தெரிவித்த விட வேண்டும். குறிப்பாக கௌதம் கம்பீர் அவருடைய வாய்ப்பு குறித்து தெளிவாக பேச வேண்டும். ஏனெனில் மிகவும் வீரரான அவரை நாம் பக்குவமாக கையாள வேண்டியது அவசியம்.

- Advertisement -

இதையும் படிங்க : ராஜஸ்தானும் இல்ல.. கொல்கத்தாவும் இல்ல.. ஹார்டிக் பாண்டியா செல்லப்போகும் புதிய அணி – வெளியான தகவல்

ஒருவேளை அவர் வாய்ப்பு கிடைக்காமல் மனரீதியாக பாதிக்கப்பட்டால் அது அவருக்கு பின்னடைவை தரும் எனவே கௌதம் கம்பீர் வைபவ் சூர்யவன்ஷியிடம் தெளிவான விளக்கத்தை கொடுத்து அவரை ஆதரிக்க வேண்டும் என்றும் பார்த்திவ் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement