அபிஷேக் சர்மாவிடம் இருக்கும் இந்த பவர் கொஞ்சம் கூட மாறல.. பாராட்டி தள்ளிய – அஜய் ஜடேஜா

Ajay Jadeja and Abhishek
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 24 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 59 ரன்கள் குவித்து அசத்தினார். பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்திலும் அவர் ஆடிய அதிரடியான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.

அபிஷேக் சர்மாவை பாராட்டிய அஜய் ஜடேஜா :

அவரது அதிரடியான துவக்கம் காரணமாக பின்னால் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சிவம் துபே ஆகியோரும் பேட்டிங்கில் கைகொடுக்க இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்திருந்தது. அபிஷேக் சர்மாவின் இந்த ஆட்டம் சில சாதனைகளையும் அவருக்கு பெற்று கொடுத்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த முதலாவது போட்டியில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மாவை முன்னாள் இந்திய வீரரான அஜய் ஜடேஜா பாராட்டி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : பலரும் வைபவ் சூர்யவன்சியை பாஸ் பேபி என்று கூறி வருகின்றனர். ஆனால் அபிஷேக் சர்மா தான் உண்மையான ஓல்டு பாஸ் பேபி.

அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அதிரடியான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி இருக்கிறார். இந்திய அணிக்காக அறிமுகமானதிலிருந்து தற்போது வரை அவருடைய அப்ரோச் மாறியதே கிடையாது. அவரிடம் இருக்கும் திறன் அதிரடியாக விளையாடுவது மட்டும் தான். அதை இன்னும் கொஞ்சமும் மாற்றாமல் செய்து வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் புதிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் இஷான் கிஷன் – விவரம் இதோ

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த முதல் போட்டியில் மைதானம் சவாலாக இருந்தும் அவர் அதிரடியாக ஆடியது இந்திய அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தது. மற்ற வீரர்கள் எல்லாம் ஏதாவது ஒரு திசையில் பலமாக இருப்பார்கள். ஆனால் அபிஷேக் சர்மாவை பொறுத்தவரை மைதானத்தின் எந்த திசையிலும் அடித்து விளையாடும் திறனை வைத்துள்ளார் என அபிஷேக் சர்மாவை பாராட்டி அஜய் ஜடேஜா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement