திலக் வர்மா அப்படி விளையாடுனது ரொம்ப தப்பு.. அதனால் தான் இந்திய அணி தோற்றது – சீக்கா ஸ்ரீகாந்த் விளாசல்

Srikkanth and Tilak Varma
- Advertisement -

அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த தொடரையும் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இழந்தது. இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

திலக் வர்மாவின் ஆட்டம் குறித்து பேசிய சீக்கா ஸ்ரீகாந்த் :

இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது திலக் வர்மா ஆடிய ஆட்டம் மிகவும் தவறான ஒன்று என்றும் தனது சொந்த ஆட்டத்திற்காக அவர் விளையாடியது போன்று தெரிந்ததாகவும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவரை விளாசியுள்ளார். இந்த போட்டியில் 46 பந்துகளை சந்தித்து 55 ரன்களை அடித்த திலக் வர்மாவின் ஆட்டம் குறித்து பேசிய ஸ்ரீகாந்த் கூறுகையில் :

- Advertisement -

டி20 போட்டிகளில் மிடில் ஓவர்களில் இதுபோன்று பொறுமையாக விளையாட கூடாது. திலக் வர்மா, ஷிவம் தூபே, அக்சர் படேல் என அனைவருமே மிகக் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடினர். போட்டியின் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தால் அதன்பிறகு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும்.

இருந்தாலும் மிகவும் பொறுமையாகவும் அந்த நேரத்தில் விளையாடக்கூடாது. கிட்டத்தட்ட 45 பந்துகள் வரை பவுண்டரி அடிக்காமல் விளையாடினால் டி20 போட்டிகளில் எவ்வாறு வெற்றிபெற முடியும். திலக் வர்மா இந்த போட்டியில் அவரது சுயநலத்திற்காக விளையாடியது போன்று தெரிந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : இரண்டு ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் மீண்டும் கம்பேக் கொடுக்கப்போகும் – ஜஸ்ப்ரீத் பும்ரா

மிடில் ஓவர்களில் திலக் வர்மா அதிரடியாக விளையாடியிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் என்றும் திலக் வர்மாவின் ஆட்டத்தை ஸ்ரீகாந்த் விளாசியது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து தொடரை முடித்த கையோடு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு நடைபெறயிருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

Advertisement