இரண்டு ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் மீண்டும் கம்பேக் கொடுக்கப்போகும் – ஜஸ்ப்ரீத் பும்ரா

Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியில் விளையாடிய அவர் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார்.

மீண்டும் கம்பேக் கொடுக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா :

அதுமட்டுமின்றி அந்த தொடரின் போது காயம் காரணமாக சில போட்டிகளையும் தவறவிட்டார். தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வரும் அவரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு நிர்வாகமான பி.சி.சி.ஐ அவரை ஒருநாள் போட்டிகளில் கடந்த 2 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்து வந்தது.

- Advertisement -

இவ்வேளையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2027 ஒருநாள் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு மீண்டும் அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாட கம்பேக் கொடுத்துள்ளார். அப்படி நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் அவர் இந்த தொடரில் இருந்து முழு வீச்சில் ஒருநாள் போட்டிகளில் விளையாட தயாராவார் என்றும் கூறப்படுகிறது.

ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2023 ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலககோப்பை தொடரில் விளையாடியிருந்த அவர் அதன்பின்னர் 2 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் திரும்பவுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : தன்னுடைய கரியருக்காக முக்கிய முடிவை கையிலெடுத்த ஹார்டிக் பாண்டியா – விவரம் இதோ

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Advertisement