ரோஹித் சர்மாவுக்கு அந்த வாய்ப்பை கண்டிப்பாக வழங்க வேண்டும் – சுனில் கவாஸ்கர் கருத்து

Sunil Gavaskar and Rohit Sharma
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை தான் விளையாட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துவிட்டு தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த சுனில் கவாஸ்கர் :

ஆனால் அவரது வயது மற்றும் பிட்னஸ் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் தேர்வு செய்யப்படுவாரா? மாட்டாரா? என்ற விமர்சனம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒருபுறம் இந்த பேச்சு இருந்து வந்தாலும் முன்னாள் வீரர்களின் ஆதரவும் ரோகித் சர்மாவுக்கு இருந்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் 2027 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா நிச்சயம் இடம் பிடித்து விளையாட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மாவின் இடம் குறித்து கடந்த சில மாதங்களாகவே நிறைய பேசி வருகிறோம்.

ஆனால் என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா இந்த இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வாய்ப்பை உறுதி செய்வார் என்று நம்புகிறேன். இங்கிலாந்து தொடரில் அவர் விளையாடப்போகும் விதம் நிச்சயம் அவருடைய திறனை வெளிக்காட்டும் ஒன்றாக இருக்கும். அதோடு அனுபவம் வாய்ந்த துவக்க வீரராக இருக்கும் ரோகித் சர்மா ஐ.சி.சி தொடர்களில் சிறப்பாக செயல்பட கூடியவர்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா இங்கிலாந்து டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? வெளியான ஒளிபரப்பு தகவல் – விவரம் இதோ

அழுத்தமான வேளையிலும் அவரது அனுபவம் நிச்சயம் நமது அணிக்கு கைகொடுக்கும். இதன் காரணமாக 2027 உலக கோப்பை தொடரில் அவர் விளையாட வேண்டும். அதற்கான வாய்ப்பை நிர்வாகம் வழங்க வேண்டும் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement