அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை அயர்லாந்து அணியிடம் இழந்தது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டி20 அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்தியா இங்கிலாந்து தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? :
2026 டி20 உலக கோப்பை தொடரை வென்றதற்கு பின்னர் புதிய கேப்டன் தலைமையில் விளையாடிய இந்திய அணி முதல் தொடரிலேயே தோல்வியை சந்தித்ததால் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் ஜூலை 1-ஆம் தேதியான நாளை முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரை எந்த தொலைக்காட்சியில் காணலாம்? இந்திய நேரப்படி போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை சோனி ஸ்போர்ட்ஸ் குழுமம் பெற்றுள்ளதால் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் இந்த தொடரை இந்திய ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்திய நேரப்படி போட்டிகள் இரவு 10 மணிக்கு துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷி தயாராக இருக்கிறார்.. ஆனால் அவர் அறிமுகம் ஆகாதது ஏன்? – துணை பயிற்சியாளர் விளக்கம்
ஏற்கனவே 2026 டி20 உலககோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடியிருந்த இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



