டி20 உலககோப்பை தொடரின் போது சச்சின் சார் கொடுத்த அந்த அட்வைஸ் ரொம்ப ஹெல்ப் பண்ணுச்சு – சஞ்சு சாம்சன் பேட்டி

Sanju Samson
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. 2024 டி20 உலக கோப்பை வென்றிருந்த இந்திய அணி நடப்பு சாம்பியனாக இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று மீண்டும் ஒருமுறை கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது. இதன்மூலம் மூன்று முறை டி20 உலக கோப்பையை வென்ற அணியாகவும், அடுத்தடுத்த டி20 உலக கோப்பைகளை வெற்றி பெற்ற அணியாகவும் இந்திய அணி சாதனை நிகழ்த்தியிருந்தது.

சச்சின் குடுத்த அட்வைஸ் குறித்து பேசிய சஞ்சு சாம்சன் :

இந்த டி20 உலக கோப்பை தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் இந்திய அணியின் துவக்க வீரரான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியின் போது இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் மீண்டும் அணிக்குள் வந்த சஞ்சு சாம்சன் 5 போட்டிகளில் விளையாடி 80 ரன்கள் சராசரியுடன் 321 ரன்கள் குவித்து அசத்தினார். அதிலும் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடிய அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக அசத்தியதால் அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை தொடரின் ஆரம்ப கட்டத்தில் வாய்ப்பினை பெறாத அவர் பிற்பாதியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இவ்வேளையில் உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காத போது சச்சின் டெண்டுல்கர் தனக்கு கொடுத்த அறிவுரைகள் என்ன? என்பது குறித்த சில கருத்துக்களை சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

ஆஸ்திரேலியா மண்ணில் வாய்ப்பு கிடைக்காமல் நான் வெளியில் அமர்ந்திருந்த போது சச்சின் சாருடன் நிறைய பேசினேன். அவர் எனக்கு நிறைய அறிவுரைகளை வழங்கியிருந்தார். அதேபோன்று 2026 டி20 உலக கோப்பை தொடரின் போதும் என்னை அழைத்து பேசிய அவர் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக நான் நீண்ட ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியுள்ளேன். என்னுடைய கரியரில் ஏகப்பட்ட விடயங்களை நான் எதிர்கொண்டும் உள்ளேன்.

- Advertisement -

இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கணும்னா இது நடந்தா மட்டும் தான் உண்டு – விவரம் இதோ

என்னை பொருத்தவரை நீ 100% உனது அணிக்காக பங்களிப்பை வழங்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தால் அந்த அர்ப்பணிப்பு உனக்கு நிச்சயம் வெகுமதிகளை பெற்று தரும் என்று கூறினார். அந்த வகையிலே இந்திய அணிக்காக என்னுடைய 100% பங்களிப்பையும் வழங்க தயாராக இருந்தேன். அப்படி எனக்கு கிடைத்த வாய்ப்பில் தான் இந்த உலகக்கோப்பை தொடரில் அசத்தியதாகவும் சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement