நாங்க ஹார்டிக் பாண்டியாவை குடுக்குறோம்.. பதிலுக்கு நீங்க அவரை தாங்க – ராஜஸ்தானுடன் டீல் போட்ட மும்பை இந்தியன்ஸ்

Hardik Pandya RR
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டான ஹார்டிக் பாண்டியா ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டதன் காரணமாகவே சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதன்பிறகு தொடர்ந்து இந்திய அணிக்காகவும், மும்பை அணிக்காகவும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் ஒரு கட்டத்தில் மோசமான ஃபார்ம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறும் ஹார்டிக் பாண்டியா :

அதன்பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்ற அவர் கேப்டனாக முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். பின்னர் இரண்டாவது சீசனிலும் இறுதிப்போட்டி வரை அந்த அணியை கொண்டு சென்றதால் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை டிரேடிங் முறையில் தங்களது அணிக்குள் கொண்டு வந்தது.

- Advertisement -

ஆனால் இரண்டாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் பொறுப்புடன் வந்த பாண்டியாவின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. அதோடு கடந்த சில ஆண்டுகளாகவே அவரது தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய தோல்விகளை சந்தித்ததால் அவரை இம்முறை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்க முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் 2027 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விட்டுக் கொடுக்க தயாராக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை டிரேடிங் முறையில் மாற்றுவதற்காக முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தையையும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : லக்னோ அணியிலிருந்து ரிஷப் பண்ட் வெளியேற முக்கிய காரணமே இதுதானாம் – விவரம் இதோ

ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை விட்டுக் கொடுக்க விருப்பம் தெரிவித்து இந்த ஒப்பந்தத்தை முடிவு செய்தால் ஹார்டிக் பாண்டியா ராஜஸ்தான் அணிக்கும், யாஷஸ்வி ஜெயிஸ்வால் மும்பை அணிக்கும் இடம் மாறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement