இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் தரம்சாலா நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா இடம்பெறுவது சந்தேகம் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது ஜூன் 17-ஆம் தேதியான நாளை லக்னோ நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் துவக்க வீரரான ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் அது குறித்த உண்மை இன்னும் உறுதியாகவில்லை. அந்த வகையில் கடந்த ஒருநாள் போட்டியின் போது விளையாடிய ரோகித் சர்மா தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக காயத்தை சந்தித்தார்.
அதன்காரணமாக அவர் அவதிப்பட்டதாகவும் அதனால் சில அசவுகரியங்களை சந்தித்த அவருக்கு இரண்டாவது போட்டியின் போது ஓய்வு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை ரோகித் சர்மா இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டால் அவருக்கு பதிலாக மாற்றம் நடைபெறும் என்பது உறுதி.
இதையும் படிங்க : இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல.. சூர்யவன்ஷியை சீண்டிய இலங்கை வீரர்களுக்கு – திலக் வர்மா எச்சரிக்கை
அந்தவகையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து அவர் விலகினால் அவருக்கு பதிலாக மற்றொரு இளம் துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி. கடைசியாக தான் விளையாடிய ஒருநாள் போட்டியின் போது ஜெய்ஸ்வால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சதம் அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.



