ஹார்டிக் பாண்டியாவுக்கு பேக்கப் வீரராக இவரை அணியில் சேருங்க – சுரேஷ் ரெய்னா கருத்து

Raina and Pandya
- Advertisement -

இந்தியாவில் கடந்த முறை நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. அதனால் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வென்றாக வேண்டும் என்ற முனைப்புடன் தற்போது இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கு ஒரு ஆண்டு மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் தற்போது அதற்கான ஏற்பாடுகளை இந்திய அணி தீவிர படுத்தியுள்ளது.

ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலா இவரை தயார் பண்ணுங்க : சுரேஷ் ரெய்னா

அந்த வகையில் எதிர்வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி அதன்பின்னர் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. இனிவரும் அடுத்தடுத்த தொடர்கள் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடர்களாக உள்ளதால் வீரர்களை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டியது அவசியம் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்க்கு முன்னதாக ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக சரியான மாற்று வீரராக நிதிஷ் ரெட்டிக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

ஹார்டிக் பாண்டியா அடிக்கடி காயமடைவது கவலை அளிக்கிறது. 2027 உலகக்கோப்பை தொடர் துவங்குவதற்குள் அவருக்கு சரியான மாற்று வீரராக ஒருவரை தயார்படுத்த வேண்டும். அந்த வகையில் நம்மிடம் நிதீஷ் ரெட்டி தற்போது வரிசையில் இருக்கிறார். ஐபிஎல் தொடரின் போது அவரது பந்துவீச்சு 135 கிலோமீட்டர் வேகத்தில் இருந்தது. அதேபோன்று பேட்டிங்கிலும் அவர் சிறப்பாக செயல்படுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சரித்திரம் படைத்த வங்கதேச அணி – விவரம் இதோ

எனவே அவரை ஹார்டிக் பாண்டியாவின் பேக்கப் வீரராக தேர்வு செய்து சரியான அளவில் வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஏனெனில் பாண்டியா விளையாடாத போது இந்திய அணியின் சமநிலை பாதிக்கிறது. எனவே அந்த இடத்தில் சரியான ஒரு வீரராக நிதீஷ் ரெட்டியை நாம் ஆதரித்து வளர்த்தெடுக்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement