இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இலங்கை ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தது.
ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் வீழ்த்திய இந்திய ஏ அணி :
அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிராக இன்று தம்புலா நகரில் இரண்டாவது போட்டியில் இந்திய ஏ அணி பங்கேற்று விளையாடியிருந்தது. இந்த போட்டியானது மழை காரணமாக ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 49 ஓவர்கள் வரை நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் ஏ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி ஏ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக பிரப் சிம்ரன்சிங் 84 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா ஆகியோர் 66 ரன்களையும் குவித்திருந்தனர்.
பின்னர் 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய ஆப்கானிஸ்தான் அணி 25.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்திருந்த வேளையில் போட்டி மழை காரணமாக தடைபட்டது. பின்னர் நீண்ட நேரமாகியும் போட்டி துவங்காததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் ஏ அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க : 55 ஆண்டுகால வரலாற்றில் பரிதாப சாதனையை சந்தித்த ஆஸ்திரேலிய அணி – மீண்டும் வங்கதேசம் அசத்தல்
மழை காரணமாக போட்டி அதிக நேரம் தடைப்பட்டதால் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய ஏ அணியானது இந்த போட்டியில் 349 ரன்களை அடித்தும் இந்த போட்டியில் ஒரு ஏமாற்றமான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.



