சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. இதற்கடுத்து இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
ரோஹித் சர்மாவிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து : திலக் வர்மா பேச்சு
அந்த வகையில் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியும், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியும் ஏற்கனவே பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று புதிய துணை கேப்டனாக திலக் வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னர் அக்சர் பட்டேல் துணை கேப்டனாக இருந்த வேளையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக திலக் வர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சி செய்வது எவ்வாறு என்பதை கற்றுக் கொண்டதாக திலக் வர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : ரோகித் சர்மாவுடன் நான் எப்பொழுதும் உரையாடிக்கொண்டே தான் இருப்பேன். நாங்கள் இருவரும் பேசும் போது அடிக்கடி பேட்டிங் பற்றி எதுவும் பேசுவது கிடையாது. ஆனால் கேப்டன்சி குறித்து நிறைய பேசுவோம். அவரை அருகில் இருந்து கவனிப்பதன் மூலம் நான் பல விடயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அவர் அவரது மனநிலை எவ்வாறு இருக்கிறது? அழுத்தமான சூழல்களை அவர் எவ்வாறு கையாளுகிறார்? கேப்டனாக அவருடைய அணுகுமுறை என்ன? என்பது குறித்து நான் அருகில் இருந்து கேட்டு தெரிந்து கொள்வேன்.
இதையும் படிங்க : 9 ஆவது இந்திய வீரராக அறிமுக போட்டியிலேயே முக்கிய விருதினை வென்று சாதனை நிகழ்த்திய – மானவ் சுதர்
அதன்மூலம் அவரது கேப்டன்சி ஸ்டைலை கற்றுக் கொண்டுள்ளேன் மேலும் அவரும் எனக்கு தனிப்பட்ட வகையில் நிறைய வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளார். அந்த அனுபவத்தை நான் இந்திய ஏ அணிக்காக பயன்படுத்திக் கொள்கிறேன். சரியான நேரத்தில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது அதை சிறப்பாக செயல்படுத்த முயற்சிப்பேன் என திலக் வர்மா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



