9 ஆவது இந்திய வீரராக அறிமுக போட்டியிலேயே முக்கிய விருதினை வென்று சாதனை நிகழ்த்திய – மானவ் சுதர்

Manav Suthar
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நியூ சண்டிகர் நகரில் கடந்த ஜூன் 6-ஆம் தேதி துவங்கிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்று இந்த தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

9 ஆவது இந்திய வீரராக மானவ் சுதர் அசத்தல் சாதனை :

அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தங்களது முதலில் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 564 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 152 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அறிமுக வீரர் மானவ் சுதர் தேர்வு செய்யப்பட்டார். ஏனெனில் இந்த போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்கையில் 28 ரன்களை குவித்த அவர் பந்துவீச்சில் முதல் இன்னிங்சில் 33 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டை கைப்பற்றினார்.

அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்சின் போது 29 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் என ஏழு விக்கெட்டை கைப்பற்றியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதின் மூலம் அவர் ஒன்பதாவது இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை அறிமுக போட்டியில் நிகழ்த்தியுள்ளார். அதாவது இதுவரை இந்திய அணிக்காக தாங்கள் விளையாடிய அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்ற வீரர்களாக 8 வீரர்கள் இருந்தனர்.

- Advertisement -

இதையும் படிங்க : இதுதான் என்னுடைய கனவு.. அது நடந்ததில் மிகவும் மகிழ்ச்சி.. ஆட்டநாயகன் மானவ் சுதர் – அளித்த பேட்டி

இவ்வேளையில் இந்த பட்டியலில் மானவ் சுதர் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே இந்திய அணிக்காக பிரவீன் ஆம்ரே, ஆர்.பி சிங், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான், ரோகித் சர்மா, ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்த வேளையில் மானவ் சுதர் இந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement