இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதன்மை துவக்க வீரராக விளையாடிய 15 வயதான வைபவ் சூரியவன்ஷி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் என 776 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தினார். மேலும் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த தொடரில் 72 சிக்ஸர்களையும் பறக்க விட்டிருந்தார்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு சிறப்பு அனுமதி வழங்கிய : பி.சி.சி.ஐ
அவரது இந்த அதிரடியான ஆட்டம் காரணமாக விரைவில் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பலரும் ஆதரவு தெரிவித்தனர். அதே வேளையில் அவருக்கு தற்போது இந்திய ஏ அணியில் இடம் கிடைத்து இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய சீனியர் அணி நேற்று அறிவிக்கப்பட்ட போது துவக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல் முறையாக இந்திய சீனியர் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வைபவ் சூர்யவன்ஷியை தேர்வு செய்வதை எங்களால் தடுக்க இயலவில்லை. அந்த அளவிற்கு வைபவ் சூர்யவன்ஷி அசத்தியுள்ளார் என்று தேர்வுக்குழு அறிவித்திருந்தது.
இதன் காரணமாக அவர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அறிமுகமாவது உறுதி. இந்நிலையில் சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி மிக இளம் வயது வீரர் என்பதனால் அவருடைய வயதையும், அனுபவத்தையும் கணக்கில் கொண்டு அவருக்கு ஒரு புதிய சிறப்பு அனுமதியை பி.சி.சி.ஐ வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : எனக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வந்தது ஹேப்பி தான் – வெளிப்படையாக வாழ்த்திய சூரியகுமார் யாதவ்
அதாவது தற்போது வைபவ் சூரியவன்ஷி மிகவும் சிறு வயது வீரர் என்பதனால் அவர் வெளிநாட்டு சூழ்நிலைக்கு பழகிக் கொள்ளும் வகையிலும், சீனியர் வீரர்களுடன் நேரத்தை செலவிட பழகிக் கொள்ளும் வகையிலும் மனரீதியாக தயாராக வேண்டியது அவசியம். அதனால் அவருடைய குடும்பத்தினர் சூரியவன்ஷியுடன் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பயணிக்கலாம் என்றும் அவர்களது அனைத்து செலவுகளையும் பிசிசிஐ ஏற்கும் என்று தெரிவித்துள்ளது.



