சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
விராட் கோலிக்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிப்பு :
அந்த வகையில் வெளியான இந்த ஒருநாள் அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரரான விராட் கோலி 2026 ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.
அவரது காயம் குணமடைய குறைவான நாட்களே ஆகும் என்றாலும் அவர் முன்னெச்சரிக்கை காரணமாக இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை தவறவிடுகிறார் என்றும் பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது. இவ்வேளையில் விராட் கோலி இந்த தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக எந்த வீரர் அணியில் சேர்க்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்திருந்தது.
இவ்வேளையில் விராட் கோலிக்கு மாற்று வீரராக மற்றொரு இளம் இடது கை துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் விராட் கோலியின் இடத்திற்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த இடத்தை ஜெய்ஸ்வால் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திய டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு சூரியகுமார் வெளியிட்ட – இமோஷனல் பதிவு
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி வருகின்ற ஜூன் 13-ஆம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூன் 17-ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூன் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



