எனக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வந்தது ஹேப்பி தான் – வெளிப்படையாக வாழ்த்திய சூரியகுமார் யாதவ்

Suryakumar and Shreyas
- Advertisement -

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டி20 கிரிக்கெட் அணியானது பி.சி.சி.ஐ-யின் மூலம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்படி வெளியான அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 2026 டி20 உலக கோப்பை தொடரை கேப்டனாக நின்று வழிநடத்திய சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்கு மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பையையும் வென்று கொடுத்தார்.

ஷ்ரேயாஸ் ஐயரை வாழ்த்திய சூரியகுமார் யாதவ் :

அவரது தலைமையின் கீழ் இந்திய அணி எந்த ஒரு டி20 தொடரையும் இழக்காமல் வெற்றிகரமாக செயல்பட்டு வந்த வேளையில் அவரது தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மோசமாக இருந்ததால் இந்திய அணியின் எதிர்காலத்தை கழுத்தில் கொண்டு அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதோடு சேர்த்து அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

- Advertisement -

அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ளார். இப்படி தான் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் இந்திய அணி அடுத்தடுத்து விளையாட இருக்கும் தொடர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சியான ஒரு பதிவினையும் சமூக வலைதளத்தின் மூலம் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் அடுத்த கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டது குறித்து சூரியகுமார் யாதவ் உள்ளூர் போட்டி ஒன்றில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடர் : விராட் கோலிக்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிப்பு

ஏனெனில் மும்பை அணிக்காகவும் சரி, இந்திய அணிக்காகவும் சரி நாங்கள் நிறையவே சேர்ந்து விளையாடி இருக்கிறோம். அதேபோன்று டி20 இந்திய அணியில் மூன்றாவது முறையாக மும்பையிலிருந்து ஒரு கேப்டன் உருவாகியதற்காக பெருமை கொள்கிறேன் என்றும் சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement