இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் இந்தியாவில் நடைபெற்ற 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக பெரிய பின்னடைவை சந்தித்தார். ஏற்கனவே அவரது தலைமையில் இந்திய அணி 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும் தனிப்பட்ட வகையில் அவரது பேட்டிங் ஃபார்ம் மீது பெரியளவில் விமர்சனங்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து தற்போது ஐ.பி.எல் தொடரிலும் அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்துள்ளது.
சூரியகுமார் யாதவின் இடத்தை நிரப்பப்போகும் மாற்றுவீரர் :
இதன் காரணமாக அவர் இந்திய டி20 அணியின் கேப்டன் பதிவியிலிருந்து நீக்கப்படலாம் என்ற தகவல்கள் கடந்து சில நாட்களாகவே வெளியாகி வந்தன. மேலும் சூரியகுமார் யாதவ் டி20 கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிகளில் மிகச் சிறப்பாக கேப்டன்சி செய்துவரும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
அதோடு கேப்டன்சி போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருடன் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருபுறம் டி20 கேப்டனாக மாறப்போகும் வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு இருக்கும் வேளையில் சூரியகுமார் யாதவ் டி20 அணியிலிருந்தே நீக்கப்படுகிறார் என்ற செய்தியும் தற்போது கிடைத்துள்ளது.
அந்த வகையில் ஒருவேளை சூரியகுமார் யாதவ் டி20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக பேட்ஸ்மேனாக அந்த இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலாக தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி : சூரியகுமார் யாதவ் இந்திய டி20 அணியில் தனது இடத்தினை இழக்கும் பட்சத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரை வென்று கொடுத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் அவருக்கு பதிலாக மாற்றுவீராக இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்திய டி20 அணிக்காக அறிமுகமாகும் வைபவ் சூர்யவன்ஷி.. எந்த தொடரில் தெரியுமா? – விவரம் இதோ
ஏனெனில் கேப்டனாக மட்டுமின்றி பேட்டிங்கிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் வழங்க வேண்டும் என்று பலரும் கூறிவரும் வேளையில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.



