குவாலிபயர் 1 போட்டிக்கு முன்னதாக ஆர்.சி.பி அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் – விவரம் இதோ

RCB
- Advertisement -

கடந்த மார்ச் 28-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஆர்.சி.பி அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் :

அதனை தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஏற்கனவே கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இம்முறையும் தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரில் தாங்கள் விளையாடிய லீக் சுற்று போட்டிகளில் 14 ஆட்டங்களில் 9 வெற்றிகளை பெற்று 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் அசைக்க முடியாத இடத்தினை பிடித்துள்ளனர். இதன் காரணமாக பெங்களூரு அணியானது குஜராத் அணிக்கு எதிரான குவாலிபயர் 1 போட்டியில் தரம்சாலா நகரில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் பெங்களூரு அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான ஜேக்கப் பெத்தல் எஞ்சியுள்ள இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் : கடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியின் போது ஃபீல்டிங்கில் டைவ் அடிக்க முயற்சிக்கையில் அவருக்கு இடது கை மோதிர விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : 206 ரன்கள் என்கிற இலக்கினை மும்பை அணிக்கு நிர்ணயித்த ராஜஸ்தான் – பிளே ஆப் செல்ல என்ன வாய்ப்பு?

இதன் காரணமாகவே அவர் நாடு திரும்புவதாகவும் எஞ்சியுள்ள இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. அதேவேளையில் ஏற்கனவே இந்த தொடரில் காயம் அடைந்த மற்றொரு இங்கிலாந்து துவக்க வீரரான ஃபில் சால்ட் தற்போது முழு உடற்தகுதி பெற்று அணிக்கு திரும்பியுள்ளதால் அவர் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement