சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்த தொடர் முழுவதுமே மோசமான தொடராக அமைந்துள்ளது. ஏனெனில் சி.எஸ்.கே அணியில் இடம் பெற்றிருக்கும் சஞ்சு சாம்சன், உர்வில் பட்டேல், கார்த்திக் சர்மா, பிரேவிஸ் என ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு போட்டியில் அசத்தலாக விளையாடி வருகின்றனர்.
3 ஆவது சி.எஸ்.கே வீரராக ருதுராஜ் கெய்க்வாட் நிகழ்த்திய சாதனை :
ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் இந்த தொடரில் இன்னும் ஒரு பிரமாதமான இன்னிங்ஸை விளையாடவில்லை. அவரது இந்த தடுமாற்றம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 63-வது போட்டியிலும் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணி முதலில் பேட்டிங் செய்கையில் :
துவக்க வீரராக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 21 பந்துகளை சந்தித்து பவுண்டரி எதுவும் அடிக்காமல் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து மீண்டும் ஒரு மோசமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவரது இந்த பேட்டிங் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் அவர் அடித்த இந்த 15 ரன்கள் மூலம் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி மற்றும் நட்சத்திர முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ஆகியாருக்கு அடுத்து மூன்றாவது வீரராக சி.எஸ்.கே அணிக்காக ஒரு மாபெரும் சாதனையை சேப்பாக்கம் மண்ணில் நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 1000 ரன்களை அடித்த சி.எஸ்.கே வீரர்களாக மகேந்திர சிங் தோனி (75 போட்டிகளில் விளையாடி 1547 ரன்கள்), மற்றும் சுரேஷ் ரெய்னா (56 போட்டிகளில் விளையாடி 1498 ரன்கள்) அடித்திருக்கும் வேளையில் இந்த பட்டியலில் மூன்றாவது வீரராக ருதுராஜ் கெய்க்வாட் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க : கடைசி ஹோம் மேட்சைலயும் இப்படியா ஆடுவீங்க.. விமர்சனத்துக்கு ஆளான ருதுராஜ் கெய்க்வாட் – விவரம் இதோ
சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 25 இன்னிங்சில் விளையாடி 1000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதன்மூலம் தோனி மற்றும் ரெய்னா ஆகியோருக்கு அடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 1000 ரன்களை பூர்த்தி செய்த மூன்றாவது சி.எஸ்.கே வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



