லக்னோ அணிக்கெதிரான போட்டியில் சி.எஸ்.கே தோல்வி.. புள்ளி பட்டியலில் சறுக்கல் – பிளே ஆப் செல்லுமா?

LSG vs CSK
- Advertisement -

லக்னோ நகரில் மே 15-ஆம் தேதியான நேற்று நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 59-ஆவது போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது :

சி.எஸ்.கே அணியை வீழ்த்திய லக்னோ :

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக கார்த்திக் சர்மா 71 ரன்களையும், ஷிவம் துபே 32 ரன்களையும் குவித்தனர். லக்னோ அணி சார்பாக ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, சபாஷ் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்ட்டையும் கைப்பற்றி இருந்தனர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக மிட்சல் மார்ஷ் 90 ரன்களையும், ஜாஸ் இங்கிலீஷ் 36 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி இந்த தொடரில் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து ஒரு ஆறுதல் வெற்றியை பெற்றது.

அதேவேளையில் சென்னை அணி லக்னோ அணியிடம் தோல்வியை சந்தித்த சென்னை அணி 12 ஆட்டங்களில் தங்களது ஆறாவது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது. ஏற்கனவே சென்னை அணி 12 ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ள வேளையில் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்புள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி நேரத்துல இப்படி நடந்தது ரொம்ப கஷ்டமா இருக்கு.. வேதனையை வெளிப்படுத்திய – ஜேமி ஓவர்டன்

அதிலும் குறிப்பாக அடுத்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்குமா? இல்லையா? என்பது ரன் ரேட் அடிப்படையில் தெரிய வரும். மற்றபடி தற்போதைய நிலையில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிக கடினம் என்பதே நிதர்சனமான உண்மை.

Advertisement