எம்.எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி – விவரம் இதோ

Kohli MS Dhoni Rohit
- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான விராட் கோலி நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற 57-ஆவது லீக் போட்டியில் 60 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த போட்டிக்கு முன்னதாக இரண்டு போட்டிகளில் டக் அவுட்டான விராட் கோலி நேற்றைய போட்டியில் மீண்டும் தனது பழைய பார்முக்கு வந்து ஆட்டமிழக்காமல் சதம் அடித்து ஆர்.சி.பி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.

தோனி மற்றும் ரோஹித்தை முந்திய விராட் கோலி :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆர்.சி.பி அணி 194 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்த போட்டியில் ஆர்.சி.பி அணியின் துவக்க வீரராக விளையாடிய விராட் கோலி 60 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 105 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் தனது ஒன்பதாவது சதத்தை பதிவு செய்த அவர் பல்வேறு சாதனைகளை முறியடித்து இருந்தார். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ் தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது சாதனையையும் கடந்து ஒரு புதிய சாதனையை விராட் கோலி நிகழ்த்தியுள்ளார்.

அதாவது ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர்களாக ரோகித் சர்மா, எம்.எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 278 ஆட்டங்களுடன் முதலிடத்தில் இருந்த வேளையில் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி விராட் கோலிக்கு ஐபிஎல் போட்டிகளில் 279-ஆவது ஆட்டமாக அமைந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : தொடர் தோல்விகளால் துவண்டு போன டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ஏற்படவுள்ள – அதிரடி மாற்றங்கள்

இதன் காரணமாக தற்போதைய நிலையில் ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரராக விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இந்த தொடர் முடிவதற்கு முன்னதாக அவர்கள் இருவரையும் விராட் கோலி ஒரு சில போட்டிகள் முந்தவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement