குஜராத் அணிக்கு எதிராக நாங்கள் அடைந்த தோல்விக்கு இதுதான் காரணம் – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன்டாக்

Shreyas Iyer
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதலில் தாங்கள் பந்து வீசுவதாக அறிவித்தது.

குஜராத் அணிக்கெதிரான தோல்வி குறித்து பேசிய : ஷ்ரேயாஸ் ஐயர்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக ஷெட்கே 57 ரன்களையும், ஸ்டாய்னிஸ் 40 ரன்களையும் குவித்தனர். பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது :

- Advertisement -

19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக சாய் சுதர்சன் 57 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது :

இந்த போட்டியில் நாங்கள் அடித்த ரன்கள் நிச்சயம் போதும் என்று நினைத்தேன். ஏனெனில் புதிய பந்தில் பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகம் இருந்தது. அந்த வகையிலேயே குஜராத் வீரர்கள் சரியான லென்த்தில் பந்துவீசி எங்களை ஆட்டமிழக்க வைத்தனர். இந்த போட்டியின் பவர்பிளேவிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து அதன்பின்னர் மீண்டு வந்து நாங்கள் 160 ரன்கள் வரை குவித்தது மிகச் சிறப்பான ஒரு செயல்பாடாக கருதுகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : அறிமுகமான ஒரே போட்டியோடு சென்னை அணியில் இருந்து விலகிய இளம்வீரர் – என்ன நடந்தது?

குஜராத் அணியை போன்று நாங்களும் புதிய பந்தில் சரியான இடத்தில் பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அது இந்த போட்டியில் முடியாமல் போனது இருந்தாலும் இறுதிவரை இந்த போட்டியை கொண்டு சென்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் நாங்கள் சற்று கூடுதல் ரன்கள் அடித்திருந்தால் முடிவு மாறியிருக்கலாம். ஆனாலும் இந்த தோல்வியிலிருந்து சில பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement