கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக துவக்க வீரராக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டும் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரில் அந்த அணியின் நட்சத்திர துவக்க வீரராக தவிர்க்க முடியாத இடத்தில் விளையாடி வருகிறார். 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திர பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி வருகிறார். சர்வதேச அனுபவம் வாய்ந்த பவுலர்களையும் இவர் அடித்து விளையாடி வருவது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அபிஷேக் சர்மாவின் சாதனை தகர்க்க காத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி :
இந்த இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 1 சதம் மற்றும் 2 அரைசதம் என 400 ரன்களை அடித்து ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியிலும் உள்ளார். அதனைத்தொடர்ந்து இன்று நடைபெறயிருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பங்கேற்று விளையாட காத்திருக்கிறார்.
இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி ஐ.பி.எல் போட்டிகளில் அபிஷேக் சர்மாவின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருக்கிறார். அந்தவகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : ஒரு ஐ.பி.எல் சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக அபிஷேக் சர்மா முதலிடத்தில் இருக்கிறார். அபிஷேக் சர்மா கடந்த 2024 ஐ.பி.எல் தொடரின் போது ஒரே சீசனில் 42 சிக்ஸர்களை அடித்திருந்தார். அதுவே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.
இவ்வேளையில் இந்த 2026 ஐ.பி.எல் தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி 37 சிக்ஸர்களை அடித்துள்ளார். எனவே இன்றைய டெல்லி அணிக்கெதிரான போட்டியில் அவர் 6 சிக்ஸர்களை அடித்தால் அபிஷேக் சர்மாவின் சாதனையை முறியடிப்பார். அதோடு இன்னும் 1 சிக்ஸரை அடிக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்தமாக 100 சிக்ஸர்களை அடித்த வீரராகவும் சாதனை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : எதாவது செய்ஞ்சி கண்டிப்பா கம்பேக் கொடுப்போம்.. பிளே ஆப் வாய்ப்பு குறித்து – ஹார்டிக் பாண்டியா பேச்சு
14 வயதிலேயே ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமாகி சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி இந்த சிக்ஸர் சாதனையும் நிகழ்த்தினால் பிற்காலத்தில் அது முறியடிக்க கடினமான ஒரு வரலாற்று சாதனையாகவும் நீடிக்க அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



