இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 42 ஆவது லீக் போட்டியானது அகமதாபாத் நகரில் ஏப்ரல் 30-ஆம் தேதியான இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றனர்.
ரோஹித்தின் சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் விராட் கோலி :
ஏற்கனவே இந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆர்.சி.பி இந்த போட்டியிலும் குஜராத் அணியை வீழ்த்தும் முனைப்புடன் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் விளையாட இருக்கும் ஆர்.சி.பி வீரர் விராட் கோலி மும்பை வீரரான ரோஹித் சர்மாவின் சாதனை ஒன்றினை சமன் செய்ய காத்திருக்கிறார்.
அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தவகையில் இன்றைய போட்டியில் விராட் கோலி நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வரும் விராட் கோலி இதுவரை 275 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிலும் குறிப்பாக இந்த போட்டிகள் அனைத்துமே ஆர்.சி.பி அணிக்காக மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் விளையாடயிருக்கும் போட்டி அவரது 276 ஆவது ஐ.பி.எல் போட்டியாக மாறியுள்ளது. இதன்மூலம் அதிக ஐ.பி.எல் ஆட்டங்களில் விளையாடிய வீரர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மாவின் (276 ஆட்டங்கள்) சாதனையை அவர் சமன் செய்யவுள்ளார். அடுத்த போட்டியில் அவரை மிஞ்சவும் கோலிக்கு வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : ரியான் பராக்கிற்கு அபராதம் விதித்து ஒரு தகுதியிழப்பு புள்ளியையும் வழங்கிய ஐ.பி.எல் நிர்வாகம் – என்ன காரணம்?
இந்த பட்டியலில் ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரராக மஹேந்திர சிங் தோனி 278 ஆட்டங்களில் விளையாடி முதலிடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை காயம் காரணமாக தோனி விளையாடாதது குறிப்பிடத்தக்கது.



