எம்.எஸ் தோனியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய குவிண்டன் டி காக் – விவரம் இதோ

Quinton De Kock and Dhoni
- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் ஆட்டத்தில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் காயம் காரணமாக துவக்க வீரர் ரோகித் சர்மா இடம்பெறாத வேளையில் அவருக்கு பதிலாக மாற்று துவக்க வீரராக குவிண்டன் டி காக்கிற்கு இந்த தொடரில் விளையாட முதல் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் :

எம்.எஸ் தோனியின் சாதனையை தகர்த்த குவிண்டன் டி காக் :

60 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 112 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் அடித்த இந்த 112 ரன்கள் மூலம் மும்பை அணி 195 ரன்கள் எட்டியிருந்தாலும் அதனை விரட்டி விளையாடிய பஞ்சாப் அணியானது 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியிருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதேவேளையில் தோல்வியை சந்தித்த மும்பை அணி ஒன்பதாவது இடத்திற்கு சரிந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணிக்காக 112 ரன்கள் அடித்ததன் மூலம் சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ் தோனியின் மாபெரும் ஐ.பி.எல் சாதனை ஒன்றிணையும் தகர்த்துள்ளார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அதிக 50+ ரன்களை அடித்த வீரராக கே.எல் ராகுல் 31 முறை ஒருமுறை 50+ ரன்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து எம்.எஸ் தோனி 24 முறை 50+ ரன்களை அடித்து இரண்டாவது இடத்தில் இருந்த வேளையில் நேற்றைய போட்டியில் டி காக் அடித்த அரைசதம் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் 25-வது முறையாக 50+ ஸ்கோரை அடித்து அந்த பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : 5 ஆவது இடதுகை வேகப்பந்து வீச்சாளராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – அர்ஷ்தீப் சிங்

அதனைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ரிஷபன்ட் ஆகியோர் தலா 21 முறை 50+ ரன்கள் அடித்து நான்காவது இடத்திலும், சஞ்சு சாம்சன் 20 முறை 50+ ரன்களை அடித்து ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement