5 ஆவது இடதுகை வேகப்பந்து வீச்சாளராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – அர்ஷ்தீப் சிங்

Arshdeep Singh
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதோடு நேற்று பெற்ற இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 4 வெற்றிகள் பெற்று 9 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அர்ஷ்தீப் சிங் நிகழ்த்திய அசத்தல் சாதனை :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 195 ரன்களை குவிக்க பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் பந்துவீசி 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவர் எடுத்த மூன்று விக்கெட்டுகளின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் அவர் எடுத்த முதல் விக்கெட்டின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் நூறாவது விக்கெட்டை பூர்த்தி செய்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால ரெக்கார்டை வெறும் 3 ரன்களில் தவறவிட்ட குவிண்டன் டி காக் – விவரம் இதோ

இதன் மூலம் ஃப்ரண்ட் போல்ட், உனட்கட், ஆஷிஷ் நெஹ்ரா, ஜாஹீர் கான் ஆகியோருக்கு அடுத்து 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஐந்தாவது இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இதே பஞ்சாப் அணிக்காக அறிமுகமான அர்ஷ்தீப் சிங் இதுவரை அந்த அணிக்காக 87 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்டை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement