அந்த பையன் மீது இப்போவே அழுத்தத்தை போடாதீங்க.. அவன் பொறுமையா வரட்டும் – அஷ்வின் ஓபன்டாக்

Ashwin and Vaibhav Suryavanshi
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதில் அறிமுகமான வைபவ் சூர்யவன்சி மிக இளம் வயதில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற வரலாற்று சாதனை நிகழ்த்தினார். அதோடு அந்த தொடரில் தான் சந்தித்த முதல் பந்தை சிக்சஸருக்கு விரட்டிய அவர் குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது அதிவேக சதத்தையும் அடித்து ஆச்சரியப்படுத்தி இருந்தார். இதனால் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணிக்காக விளையாடிய அவர் உலக கோப்பையை வெற்றி பெறவும் மிக முக்கியமான காரணமாக இருந்தார்.

வைபவ் சூர்யவன்ஷி மீது அழுத்தம் போடாதீங்க : அஷ்வின் கருத்து

அவரது தொடர்ச்சியான அதிரடி ஆட்டம் காரணமாக வெகு விரைவில் அவரை இந்திய அணிக்கு கொண்டு வர வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் முதன்மை துவக்க வீரராக விளையாடி வரும் அவர் சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

அதற்கு பிறகு அவர் அடுத்து வரும் டி20 தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் தற்போது 15 வயது ஆகும் வைபவ் சூரியவன்ஷிக்கு இன்னும் அனுபவம் தேவை என்றும் அவர் இந்திய அணிக்கு வர இன்னும் போதிய கால அவகாசத்தை அவருக்கு கொடுக்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : வைபவ் சூரியவன்சி ஒரு வளர்ந்த ஆள் கிடையாது. அவர் ஒரு குழந்தை தற்போது தான் அவருக்கு 15 வயதாகிறது. எனவே அவருக்கு இந்திய அணியில் இடம்பெறும் அளவுக்கான பெரிய இலக்கை இப்போது நாம் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அது அவருக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும். 15 வயதில் அவர் ஆடிய ஆட்டம் சிறப்பான ஒன்றுதான். ஆனாலும் இன்னும் அவருக்கு இரண்டு சகாப்தம் கிரிக்கெட்டில் காலம் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கெதிராக விளையாடிய போது கண் கலங்கியது ஏன்? – ரவீந்திர ஜடேஜா விளக்கம்

எனவே தற்போதைக்கு அவரை அமைதியாக விட்டு விடுவதுதான் நல்லது. அவர்மீது எந்த அழுத்தத்தையும் நாம் போடக்கூடாது. ஐபிஎல் போட்டிகளில் அவர் நல்ல அனுபவத்தை பெற்றால் சரியான நேரத்தில் இந்திய அணிக்கு விளையாட அவரே வருவார். எனவே இந்திய அணிக்கு அவரை வர யாரும் கட்டாயப்படுத்த கூடாது அதற்காக நாம் காத்திருக்க வேண்டும் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement