ஐ.பி.எல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த 2012-ஆம் ஆண்டிற்கு பிறகு 13 ஆண்டுகளாக சீசனின் துவக்க போட்டியில் வெற்றிபெற முடியாமல் தவித்து வந்தது. இந்த தவிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கே.கே.ஆர் அணியை வீழ்த்தி அந்த சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
ஷர்துல் தாகூர் குறித்து பாராட்டி பேசிய : ஹார்டிக் பாண்டியா
அந்த வகையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவிக்க பின்னர் தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் 4 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெடுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் வீரர்களான அஜின்க்யா ரஹானே, பின் ஆலன் மற்றும் கேமரூன் கிரீன் ஆகிய மூவரையும் ஷர்துல் தாகூர் வீழ்த்தியிருந்தார்.
இதன்காரண்மாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. சவாலான இந்த ஆடுகளத்தில் ஷர்துல் தாகூரின் சிறப்பான பந்துவீச்சு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா ஷர்துல் தாகூரின் இந்த மிகச் சிறப்பான செயல்பாடு குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து இருந்தார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் இந்த சீசன் துவங்கும் போது ஷர்துல் தாகூரிடம் ஒரு விடயத்தை தெளிவாக சொல்லிவிட்டேன். அதாவது நீ ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை பல அணிகளுக்காக மாறி மாறி விளையாடிவிட்டாய். எனவே இனி எஞ்சியிருக்கும் உன்னுடைய கரியரில் நீ மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே விளையாட வேண்டும் என்று சொல்லிவிட்டேன்.
இதையும் படிங்க : இவர் ஆடுனா எல்லாருமே வாயை பொளந்து பாப்பாங்க.. ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து – பாண்டியா புகழாரம்
ஏனெனில் அவர் ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளர். பேட்ஸ்மேன்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களை ஏமாற்றும் வகையில் பந்து வீசுவதில் அவர் சிறந்தவர். இந்த போட்டியில் அவர் மிகச் சிறப்பாக பந்துவீசியிருந்தார். அவரது இந்த சிறப்பான செயல்பாட்டை பார்ப்பதற்கு மகிழ்ச்சி என ஹார்திக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



