13 ஆண்டுகால சோகத்திற்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்த மும்பை இந்தியன்ஸ் – விவரம் இதோ

MI vs KKR
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

13 ஆண்டுகால சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை இந்தியன்ஸ் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் அஜின்க்யா ரஹானே 67 ரன்களையும், அன்கிரிஷ் ரகுவன்சி 51 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது :

- Advertisement -

19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குறித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக ரயான் ரிக்கல்டன் 81 ரன்களையும், ரோகித் சர்மா 78 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் மும்பை அணி இந்த சீசனின் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அதாவது கடந்த 2012-ஆம் ஆண்டிற்கு பிறகு தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் தங்களது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்வியை பெற்று வந்த வேளையில் இந்த ஆண்டு நடைபெற்ற சீசனின் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று இந்த 13 ஆண்டுகால சோகத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் கைரன் பொல்லார்டின் மாபெரும் சாதனையை தகர்த்த சுனில் நரேன் – விவரம் இதோ

கடந்த சில ஆண்டுகளாகவே கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணியானது இம்முறை பலம் வாய்ந்த அணியாக களமிறங்கியுள்ளதால் அவர்களே கோப்பையை வெல்வார்கள் என்று பலரும் கணித்துள்ள வேளையில் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே தாங்கள் எவ்வாறு விளையாடப்போகிறோம் என்பதை இந்த போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் எடுத்துக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement