2018-லயே வருணை எடுக்க சொல்லி கேட்டேன்.. ஆனா அவங்க என் பேச்சை மதிக்கல – ஹர்பஜன் சிங் பகிர்ந்த தகவல்

Harbhajan and Varun
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் சிஎஸ்கே பிளேயருமான ஹர்பஜன் சிங் சிஎஸ்கே அணிக்காக கடந்த 2018 மற்றும் 2019 ஆகிய இரண்டு ஆண்டுகள் விளையாடி 24 போட்டியில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும் 2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றபோதும் அவர் அந்த அணியில் இடம் பிடித்து விளையாடியிருந்தார். பின்னர் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.

வருண் சக்கரவர்த்தி தேர்வு குறித்து பேசிய : ஹர்பஜன் சிங்

சிஎஸ்கே அணிக்காக ஒரு சில சீசன்களே விளையாடி இருந்தாலும் அவர் தொடர்ந்து சிஎஸ்கே அணி குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டே வருண் சக்கரவர்த்தியை அணிக்குள் கொண்டு வருமாறு சிஎஸ்கே அணியின் நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்ததாக ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

- Advertisement -

நான் 2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் வலைப்பயிற்சியில் வருண் சக்கரவர்த்தியை முதன் முதலில் பார்த்தேன். அப்போது சிஎஸ்கே அணியின் நெட் பவுலராக இருந்த வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை எதிர்த்து முன்னணி பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். அந்த அளவிற்கு அவர் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். உடனே சிஎஸ்கே நிர்வாகத்திடம் அவரை ஒப்பந்தம் செய்யும்படி கேட்டுக் கொண்டேன்.

ஆனால் அவர்கள் என் பேச்சை கொஞ்சம் கூட கேட்கவில்லை. பின்னர் 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்பின்னர் அங்கிருந்து வெளியேறிய அவர் கொல்கத்தா அணிக்காக தேர்வு செய்யப்பட்டு தற்போது கொல்கத்தா அணியின் முக்கிய தூணாக இருக்கிறார். நிச்சயம் இந்த வீரர் பெரிய அளவில் சாதிப்பார் என்று நான் சொன்னது தற்போது நடந்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் தான் என்னுடைய பேச்சை கேட்கவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஏன் செட்டாகவில்லை? உண்மை காரணம் இதுதான் – ஒப்புக்கொண்ட சூரியகுமார் யாதவ்

அவர் கூறியது போன்று வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டும் இன்றி இந்திய அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் டி20 போட்டிகளில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருப்பது மட்டுமின்றி நடைபெற்று முடிந்த 2026 டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் பும்ராவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement