கடந்து 2024-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அந்த போட்டியுடன் இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிந்திர ஜடேஜா டி20 போட்டிகளில் இருந்து ஒன்றாக ஓய்வை அறிவித்தனர். அதன்பிறகு டி20 அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியை வாழ்த்திய : ரோஹித் சர்மா
அப்படி விளையாடி வந்த சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை தொடர்ந்து வந்த வேளையில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரையும் கைப்பற்றி மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
அதோடு நடப்பு சாம்பியனாக பங்கேற்ற இந்திய அணி இந்த தொடரையும் வென்றதன் மூலம் அடுத்தடுத்த சாம்பியன் பட்டங்களை வென்ற அணியாகவும் சாதனையை நிகழ்த்தி இருந்தது. இந்நிலையில் இந்திய அணி பெற்று வரும் இந்த வெற்றிகள் குறித்து தனது பாராட்டினை தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இது இந்திய அணிக்கு வெறும் துவக்கம் மட்டும்தான். இனிமேல் பல உலக கோப்பைகளை இந்திய அணி வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அவர் கூறியதாவது : தற்போதைய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சமீப காலமாகவே தொடர்ந்து ஐசிசி கோப்பைகளை வென்று வருகின்றது. இந்த பயணம் வெறும் தொடக்கம் மட்டும் என்று நான் நம்புகிறேன். தொடர்ந்து உத்வேகத்துடன் விளையாடி வரும் இரு அணிகளும் நிச்சயம் இன்னும் பல உலக கோப்பைகளை வெல்லும். இந்த வெற்றிக்கு தனியாக ரகசியம் ஏதுமில்லை.
இதையும் படிங்க : முன்பு ஆஸ்திரேலிய அணி செய்ததை தற்போது இந்திய அணி செய்து வருகிறது – ஜெய் ஷா பெருமிதம்
அணியின் உள்ள அனைத்து வீரர்களின் கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசாக நான் இதை பார்க்கிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி மிகச் சிறப்பான வெற்றிகளை பெற்று வருகிறது. இனியும் இந்த வெற்றி பயணம் தொடரும் என்று நம்புவதாகவும் ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.



