முன்பு ஆஸ்திரேலிய அணி செய்ததை தற்போது இந்திய அணி செய்து வருகிறது – ஜெய் ஷா பெருமிதம்

Jay Shah
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது அண்மையில் கோலாலமாக நடைபெற்று முடிந்தது. 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்றிருந்த வேளையில் மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியுடன் இந்த தொடரானது முடிவுக்கு வந்தது.

இந்திய அணியை பாராட்டிய ஐ.சி.சி தலைவர் : ஜெய் ஷா

அந்த வகையில் நடைபெற்ற அந்த மாபெரும் இறுதிப்போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது முறையாக ஐசிசி டி20 உலக கோப்பின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதோடு கடந்த 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்றிருந்தது.

- Advertisement -

இவ்வேளையில் மீண்டும் ஒருமுறை கோப்பையை கைப்பற்றி அடுத்தடுத்து டி20 உலககோப்பையை கைப்பற்றிய முதல் அணியாக வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருந்தது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பின்னர் இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் வந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியை பாராட்டியும் பலரும் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் பிசிசிஐயின் செயலாளர் மற்றும் தற்போதைய ஐ.சி.சி-யின் தலைவருமான ஜெய் ஷா நடைபெற்று முடிந்த இந்த டி20 உலககோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணி குறித்து விருது விழா ஒன்றில் புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய அணி என்றால் வெற்றி என்ற நிலையிருந்தது. அந்த நிலை மாறி தற்போதைய இந்திய அணி என்றால் வெற்றி என்ற நிலைக்கு வந்துள்ளது. இதுவே தற்போதைய நிதர்சனம்.

- Advertisement -

இதையும் படிங்க : கிரிஸ் கெயில், விராட் கோலியை விட அபிஷேக் மற்றும் ஹெட் ரொம்ப டேஞ்சர் – புஜாரா கருத்து

இந்திய அணி விளையாடும் பல்வேறு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருகிறது. உச்சத்தில் இருந்து கீழே வருவதற்கு சில மாதங்கள் போதும். ஆனால் கீழே இருந்து உச்சத்தை அடைவதற்கு பல ஆண்டுகள் ஆகும். எனவே இந்திய அணி இனிவரும் தொடர்களிலும் வெற்றியை தக்க வைத்துக் கொள்வது என்பது எளிதுதான். இதே ஆர்வத்துடனும் உழைப்புடன் தொடர்ந்து விளையாடினால் இந்திய அணி இன்னும் பெரிய உயரத்தைத் தொடும் என ஜெய் ஷா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement