டி20 உலககோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரமாண்ட பரிசுத்தொகை அறிவித்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

BCCI
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடிய நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த இறுதி போட்டியானது நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 255 ரன்கள் குவித்தது.

இந்திய அணிக்கு பிரமாண்ட பரிசுத்தொகையை அறிவித்த பி.சி.சி.ஐ :

பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 159 ரன்களுக்கு சுருண்டதால் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

- Advertisement -

நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணி மீண்டும் ஒருமுறை கோப்பையை கைப்பற்றியது மட்டுமின்றி அதிகமுறை டி20 உலக கோப்பையை வென்ற அணியாகவும் இரட்டை சாதனையை நிகழ்த்தியிருந்தது. இந்திய அணி பெற்ற இந்த பிரமாதமான வெற்றி பலரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வேளையில் இந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அவர்கள் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

இதையும் படிங்க : சுப்மன் கில்லுக்கு பதிலாக உள்ளே வந்த இவரால் தான் இந்திய அணி கோப்பையை வென்றது – ஹர்பஜன் சிங் பாராட்டு

வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை பெற்ற வீரர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்கும், தேர்வுக்குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்காலத்திலும் இதேபோன்ற வெற்றிகளை பெற வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதோடு இந்த தொடரில் வெற்றி பெற்ற வீரர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் 131 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவிப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறோம் என பி.சி.சி.ஐ குறிப்பிட்டுள்ளது.

Advertisement