சுப்மன் கில்லுக்கு பதிலாக உள்ளே வந்த இவரால் தான் இந்திய அணி கோப்பையை வென்றது – ஹர்பஜன் சிங் பாராட்டு

Harbhajan Singh
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற 2026 டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. ஏற்கனவே 2007 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் டி20 சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த இந்திய அணி இம்முறை நடப்பு சாம்பியனாக பங்கேற்று சொந்த மண்ணில் நடைபெற்ற கோப்பையை கைப்பற்றி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருந்தது.

இஷான் கிஷனை சேர்த்தது மிகச்சிறப்பான முடிவு : ஹர்பஜன் சிங் பாராட்டு

இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட இஷான் கிஷன் இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதுமே இந்திய அணிக்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது இந்திய வீரராக சாதனையை நிகழ்த்தினார்.

- Advertisement -

இந்த தொடரை பொருத்தமட்டில் 9 போட்டிகளில் விளையாடிய அவர் 35 ரன்கள் சராசரியுடன் 193 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 317 ரன்கள் குவித்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் சுப்மன் கில்லுக்கு பதிலாக இஷான் கிஷனை கொண்டு வந்தது கௌதம் கம்பீரின் தைரியமான முடிவு என்றும் அதுவே கோப்பையை வெல்ல வழி வகுத்ததாகவும் முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

இஷான் கிஷனை டி20 அணிக்குள் கொண்டு வந்தது ஒரு மிகச் சிறப்பான முடிவு. சுப்மன் கில்லுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஆரம்பத்தில் உணர்ந்தாலும் மோசமான ஃபார்மில் இருக்கும் அவருக்கு பதிலாக ரஞ்சி கோப்பை தொடரில் ஜார்கண்ட் அணியை வெற்றி பெற வைத்த இஷான் கிஷனை கொண்டு வந்தது சரி என்று நான் நினைக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய கோச்சிங் சறுக்கல் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த – கவுதம் கம்பீர்

ஏனெனில் இந்திய அணி இந்த தொடரில் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலுமே அபிஷேக் ஷர்மா எங்கு ஆட்டம் இழந்து செல்கிறாரோ அங்கிருந்து அதிரடியை இஷான் கிஷன் தொடங்கினார். இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதுமே ஒருமுறை கூட அவர் நம்மை ஏமாற்றவில்லை. அதிரடியாக பேட்டிங் செய்து இந்திய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பினை அவர் உருவாக்கி கொடுத்தார் என ஹர்பஜன் சிங் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement